பிரதான செய்திகள்

கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகளை அமைக்க தீர்மானம்

கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகள் இரண்டை அமைப்பதற்கு மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது நான்கு கழிவு நீர் ஓடைகள் ஊடாக கொழும்பில, மழை நீர் அகற்றப்படுவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொட்டாஞ்சேனையிலிருந்து முகத்துவராம் ஊடாக கடலை செல்லக்கூடிய வகையில் சுரங்கவழி நீரோடை அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பௌத்தாலோக்க மாவத்தை தொடக்கம் பம்பலப்பிட்டி ஊடாக கடலை சென்றடைய கூடி மற்றுமொரு சுரங்கவழி நீரோடையொன்றும் நிர்மானிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சுரங்கவழி நீரோடைகளும் இரண்டு வருடங்களுக்குள் நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காணரமாக கழிவு நீர் ஓடைகளை விரிவுபடுத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

தற்போது வௌ்ளவத்தை, தெஹிவளை, நாகலங்கம் வீதி மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் மாத்திரமே கொழும்பில் தேங்கும் நீரை அகற்றுவதற்கான நீரோடைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலியில் தென் பகுதி மீனவர்களின் வருகை மற்றம் சிங்கள மீள்குடியேற்றம் தடுத்து நிறுத்த வேண்டும்!

wpengine

முசலி பிரதேச கலை,கலாச்சார ,இலக்கிய விழா

wpengine

முரளிதரனின் நிறுவனத்துக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் நிலம், வெடித்தது சர்ச்ச்சை ..!

Maash