பிரதான செய்திகள்

கொழும்பில் போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கிற்ன்றனர் -முஜீபுர் றஹ்மான்

கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும் என்றும் ஆனால் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் பொலிஸார் மீது குற்றம சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கொழும்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் முஜீபுர் றஹ்மான் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரியாது போல் இருப்பதாகவும் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார.

கொழும்பு சென்ட்ரல் றோட் பகுதியில் கடந்த வாரம் 25 வயது இளைஞர் ஒருவர் இந்த போதை மாத்திரையை பாவித்ததன் மூலம் மரணமடைந்தள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர் கூட இந்த பிரதேசத்தில் போதை மாத்திரை விற்பனை குறைந்ததாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கு உரையாற்றிய நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, கொழும்பு நகரில் போதை மாத்திரை விற்பனையை இல்லாதொழிக்க பொலிஸார் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வார காலத்திற்குள் பொலிஸார் இது தொடர்பான அறிக்கை ஒன்றை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சஜித்துடன் கோவிலுக்கு சென்ற திருகோணமலை முஸ்லிம் பா.உ

wpengine

வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முஸ்லிம்ளை மறந்த விக்னேஸ்வரன்

wpengine

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine