பிரதான செய்திகள்

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் மன்னார் முதலாம் இடம்

கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் கதைப் பாடல் நிகழ்ச்சியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளின் குழுவினர் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.


இந்த சாதனை புரிந்த மாணவிகளுக்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் எம்.அஸ்மீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாஹிர் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் மகிசா, பள்ளி நிர்வாகத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளை கௌரவித்தனர்.

பாடசாலை மாணவிகள் குறித்த போட்டியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், மன்னார் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு அனுமதியளிக்கப்படாது

wpengine

ரஷ்யாவில் விரைவில் பேஸ்புக் தடை

wpengine