பிரதான செய்திகள்

கொழும்பில் ஆடிய ஞானசார தேரர் இன்று இறக்காமத்தில் இனவாதம் பேசுகின்றார் அமைச்சர் றிஷாட் காட்டம்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

நுரைச்சோலையில் அமைந்துள்ள அமானிய்யதுல் இப்றாஹீமிய்யாஹ் அறபுக் கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை இடம்பெற்றது இன் நிகழ்வின்  பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் (13) கலந்து கொண்டார்.

கல்லூரியின் அதிபர் ஐ. எம் முபாறக் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

கடந்த காட்சியில் இனவாதம் பேசி தெரிந்து பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் அன்று கொழும்பில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல இனவாத முன்னேடுப்புகளை மேற்கொண்டார். அதற்கு எதிராக நாங்கள் பல எதிர் நடவடிக்கைகளை கூட செய்தோம். அதனை அன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில்கொள்ள வில்லை நாங்கள் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டிய தேவை எமது சமுகத்திற்கு இருந்தது ஆனால் ஆட்சிமாறினாலும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அவர்களுடைய அட்டகாசங்களும் ,இனவாத நடவடிக்கையும் முற்றுப்பெற வில்லை.

இறக்காமத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து அதில் பெளத்த சிலைகளை அமைத்து இந்த இனவாதி ஞானசார தேரர் அங்கும் சென்று இனவாத நடவடிக்கை மேற்கொள்ளுவதை இந்த நல்லாட்சி அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.

அது போல வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியோற்றத்தை கூட இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரர் தென்னிலங்கையில் வாழும் பேரினவாத சமூகத்தின் மீது உண்மைக்கு புறம்பான, போலியான கருத்துகளை தெரிவித்து வருகின்றார்கள்.

அது போன்று இன்று எனக்கு எதிராக பல வழக்குகளை கூட தாக்கல் செய்துள்ளார்கள்.எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாண காதலன் கொழும்பு காதலிக்கு எழுதிய கடிதம்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் முதல் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு

wpengine

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor