பிரதான செய்திகள்

கொழுப்பை நீக்க மருந்து! உடற்பயிற்சி தேவையில்லை

கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பும் தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனைரீதியில் விஞ்ஞானிகள்செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகள், இந்த தடுப்பு மருந்து ரத்தக்குழாய்களில் கொழுப்பு தேங்குவதை தடுக்க உதவுகின்றது என்று காட்டுவதாக நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

ரத்தத்தில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு உடல் நோய் எதிர்ப்பு அமைப்பை இந்த தடுப்பு மருந்து தயார் செய்கிறது.

தற்போது கொழுப்பைக் குறைக்க, உலகெங்கிலும், ஸ்டாட்டின் என்ற மருந்தை பல லட்சக்கணக்கானோர் தினமும் எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த தடுப்பு மருந்து ஸ்டாட்டினுக்கு பதிலாகவோ அல்லது அதனுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளவோ முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த சோதனைகள் முடிவடைய ஆறு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது

Related posts

அதானி காற்றாலை திட்டத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது ..!

Maash

“சட்டம் சமனானது” எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து மாறி, தனது சுய நிலைக்கு வருகின்றது.

Maash

ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்கள் சம்பளத்தை நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை

wpengine