உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொளுத்தும் வெயிலுக்கு 24 பேர் பலி: ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலுக்கு 24 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.  

தென்னிந்திய மாநிலங்களில், பெரும்பாலான  இடங்களில் கோடை வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.   இன்று 110 டிகிரிக்கும் மேல் வெயில் அடித்தது. இந்த வெயில் கொடுமையால் இன்று ஒரே நாளில் 24 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இவ்விரு மாநிலங்களிலும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

பகலில் அனல்காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Related posts

முடிந்தது ஜெனீவா திருவிழா; அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

Editor

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

wpengine

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்

wpengine