பிரதான செய்திகள்

கொலையை மூடி மறைத்து பிரேத பரி­சோ­தனை அறிக்கை

கொலை செய்­யப்­பட்ட பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் தொடர்பில் முதலில் பிரேத பரி­சோ­தனை செய்த முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரியும், சைட்டம் தனியார் கல்­லூ­ரியின் முன்னாள் உபவேந்­த­ரு­மான வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­க­ரவின் வைத்­திய பதிவை 6 மாதங்­க­ளுக்கு இடைநிறுத்தி வைக்க இலங்கை வைத்­திய சபை தீர்­ம­னைத்­துள்­ளது.

 

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் நீதிவான் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு அமைய ஆனந்த சம­ர­சே­கர மருத்­துவ ஒழுக்க விதி­மு­றை­களை பேணி உள்­ளாரா என ஆராயும் வித­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த 7 பேர் கொண்ட மருத்­துவ சபையின் சிறப்பு விசா­ரணைக் குழு, கடந்த ஆறு மாதங்­க­ளாக இது தொடர்பில் சாட்சி விசா­ர­ணை­களை நடாத்­திய நிலை­யி­லேயே ஆனந்த சம­ர­சே­க­ரவை குற்­ற­வா­ளி­யாக கண்டு இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அடுத்த வழக்குத் தவ­ணையின் போது இலங்கை மருத்­துவ சபை இந்த விசா­ரணை அறிக்­கையை கொழும்பு மூன்றாம் இலக்க மேல­திக நீதி­வா­னுக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய இலங்கை மருத்­துவ சபை ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ராக 5 குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி விசா­ர­ணை­களை நடாத்­தி­யி­ருந்­தது. இதன் போது மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆனந்த சம­ர­சே­க­ரவை மருத்­துவ சபை விசா­ரணைக் குழு குற்­ற­வா­ளி­யாக கண்­டுள்­ளது.

சரி­யா­ன­தொரு நடை முறை இன்றி பிரேத பரி­சோ­தனை ஒன்­றினை நடாத்­தி­யமை, எலும்புத் துண்­டுகள் காணாமல் போனமை, பொறுப்­பற்ற முறையில் செயற்­பட்­டமை ஆகிய மூன்று குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பி­லேயே அவர் இவ்­வாறு குற்­ற­வா­ளி­யாக  அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

இந் நிலை­யி­லேயே ஆனந்த சம­ர­சே­கர வைத்­தியர் என்ற பதி­வினை 6 மாதங்­க­ளுக்கு இலங்கை மருத்­துவ சபை ரத்து செய்­துள்­ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் எரியும் காருக்குள் இருந்து நார­ஹேன்­பிட்டி சாலிகா மைதா­னத்­துக்கு அருகில் வைத்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இது தொடர்பில் முதலில் அப்­போ­தைய சட்ட வைத்­திய அதி­காரி ஆனத்த சம­ர­சே­கர  பிரேத பரி­சோ­த­னை­களை நடாத்­தினார். இதன் போது வஸீம் தாஜு­தீனின் மரணம் விபத்தால் ஏர்­பட்­டது என அவர் அறிக்கை சமர்ப்­பித்­துள்ளார். இந் நிலையில் வஸீமின் சடலம் மீள தோண்டி எடுக்­கப்­பட்டு தற்­போ­தைய கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி விஷேட வைத்­திய நிபுணர் அஜித் தென்­னகோன் தலை­மை­யி­லான மூவர் கொண்ட குழு­வி­னரால் பிரேத பரி­சோ­தனை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் போதே வஸீம் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­னது.

முதலில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னை­களின் போது மேல­திக சோத­னை­க­ளுக்கு என எடுக்­கப்­பட்ட வஸீமின் சில எலும்­புகள் காணாமல் போயுள்­ள­மையும் தெரி­ய­வந்­தது. இந் நிலை­யி­லேயே முதல் பிரேத பரி­சோ­த­னையை முன்­னெ­டுத்த வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­கர  வைத்­திய ஒழுங்கு விதி­மு­றை­க­ளுக்கு அமைய நடந்­து­கொண்­டுள்­ளாரா என்­பதைக் கண்டறிய இலங்கை மருத்துவ சபை விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணைகளிலேயே மருத்துவ சபையால் ஆனந்த சமரசேகர தற்போது குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

யாழில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!

Editor

மதில்மேல் பூனையாக பதுங்கி இருந்துவிட்டு காய்ச்சிய பாலுக்காக பாய்ச்சலுக்கு தயாரா?

wpengine

கிழக்கு மாகாண சபை முன்னால் உறுப்பினர்களுக்கு புதிய பிரச்சினை

wpengine