பிரதான செய்திகள்

கொலன்னாவையில் மூன்று இளம் பெண்களை காணவில்லை

கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தில் உடை வாங்கச் சென்ற மூன்று இளம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் மாலிதி வத்சலா பெரேரா, யசாந்தி மதுசானி வயது – 15, மற்றும் சஜித்ரா வயது 14 என்போரே காணாமல் போயுள்ளனர்.

இவர்களில் மாலிதி வத்சலா பெரேரா திருமணமாகியவர் எனவும், அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை (14ஆம் திகதி) உடை வாங்க கடைக்குச் சென்றதாகவும், இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பெண்களை காணாமல் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காணாமல் போன பெண்களில் ஒருவரான யசாந்தி மதுசானியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், குறித்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்களை யாரேனும் கடத்தி இருக்கக்கூடும் என பெற்றோர் சந்தேகம் வெளியிட்டதுடன், வெல்லம்பிட்டி பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts

மன்சூர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

wpengine

மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல.

Maash

கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை. – அமைச்சர் ஆனந்த விஜேபால

Maash