தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பாக அச்ச உணர்வுக்கு பேஸ்புக் முற்றாக தடை

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான விளம்பரங்களை தடைசெய்வதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.


அத்தோடு கொரோனா வைரஸ் தொடர்பில் பேஸ்புக்கில் வெளியாகும் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து போன்றவற்றை பரப்பும் விளம்பரங்களுக்கும் மற்றும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பதற்றமான மற்றும் அச்ச உணர்வுகளை உருவாக்குவதற்கும் முற்றாக தடை செய்வதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் நோயினால் இன்றுவரை சுமார் 2,800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.


சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பக்கத்தில் பதிவிடப்படும் செய்தி உள்ளடக்கத்தின் வகை, குறிப்பாக தீவிர சித்தாந்தங்கள் மற்றும் போலி செய்திகளை பிரதிபலிக்கும் தகவல்கள் குறித்த ஒழுங்குமுறை ஆய்வுகளை செய்து வருகிறது.
”முகக்கவசங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க 100 வீத உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன” போன்ற வாசகங்கள் கொண்ட விளம்பரங்கள் தமது பக்கத்தில் அனுமதிக்கப்படாது என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், ஐக்கிய அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தயாராகுமாறு எச்சரித்திருந்தது.

Related posts

மாடுகளை வெட்ட தடை: மேகாலயா மாநிலத்தில் பா.ஜ.க.விலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்

wpengine

திருகோணமலை திருமண வீட்டில் ரணில்,றிஷாட்,ரவூப்

wpengine

“முஸ்லிம் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பது கடினம்” – அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine