உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘எனக்கு கொரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுகொடுத்திருக்கிறது’ என கூறி உள்ளார்.

மேலும், சீனாவால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Related posts

மாவட்டங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு புதிய நிருவாகத்தின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்.

wpengine

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் “விழுமியம்” காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்!

Editor

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்! 40 பேர் சஜித்துக்கு ஆதரவு

wpengine