பிரதான செய்திகள்

கொக்கெயின் பொலிசாரிடம் ஒப்படைப்பு சதொச நிறுவனத் தலைவர்

 (ஊடகப்பிரிவு)
இரத்மலான சதொச வெயார் கௌசிற்கு கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பார்சல்கள் காணப்பட்டதனால், அது தொடர்பில் கல்கிசைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கலனை தமது நிறுவனம் கல்கிசைப் பொலிசிடம் ஒப்படைத்தது என்று சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார்.

பின்னர் ஒவ்வொரு பார்சலிலும் தலா பதினாறு கிலோ கிராம் அடங்கிய 160 கிலோ கிராம் கொக்கெயின் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம். கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது

சதொச நிறுவனத்துக்கான சீனி வாரா வாரம் டெண்டர் அடிப்படையிலேயே கோரப்பட்டு கொள்வனவு செய்யப்படுவதே நடைமுறை. அந்த வகையில் இந்த வாரம் ரஞ்சிதா பிரைவட் லிமிட்டட் நிறுவனமே டெண்டரில் தெரிவாகியது. அந்த நிறுவனத்தினால் கொழும்புத் துறைமுகத்திலிருந்து இரத்மலான வெயார் கௌசுக்கு கொண்டுவரப்பட்டிருந்த சீனியிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இருப்பதை ஊழியர்கள் கண்டதனால் அங்குள்ள அதிகாரிகளுக்கும் எனக்கும் இந்த விடயத்தை அறிவித்தனர்.

அதன் பின்னரேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் என்றும் சதொச நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

 

Related posts

அம்பாறையில் முஸ்லிம் கட்சிகளின் குத்தாட்டம்.

wpengine

மேல் மாகாண அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்படுவர் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்

wpengine

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்

wpengine