செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் மரணம்.

பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் அசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த இளைஞன் நேற்றையதினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது..

Related posts

ரோஹிங்கிய மக்களை காட்டுமிராண்டித்தனமாக வெளியேற்றிய இனவாதிகள்! அமைச்சர் றிஷாட் கவலை

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால்!ஜனாதிபதியாக இருக்கவிட மாட்டார்.

wpengine

மன்னார் பிரதேசச் செயலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் முறைகேடு

wpengine