பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கூட்டமைப்பின் சமகால அரசியல் தொடர்பில் மன்னாரில் கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் நேற்று காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிறீதரன், சிவமோகன், சீ.யோகேஸ்வரன், சிறீநேசன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது கிராம மட்ட தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாதர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் வருகை தந்த பிரமுகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததோடு, சமகாலஅரசியல் நிலவரம் தொடர்பிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் தெரியப்படுத்தினர்.

சுமார் 4 மணி நேரம் குறித்த சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் பொது மக்கள் சார்பாக ஒரு சிலருடைய கருத்துக்களை மாத்திரமே தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
எனினும் முக்கிய கருத்துக்களை தெரிவிக்க இருந்த போதும் குறித்த கலந்துரையாடலில் தமது கருத்தை தெரிவிக்க நேரம் வழங்கப்படாத நிலையில், குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் நிறைவடைந்ததாக பலர் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

3 water projects in Sri Lnaka – Indian Export-Import Bank given Loan US$ 304 million

wpengine

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!

Editor

டெங்கு ஒழிப்பு ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – அரசாங்கத்துக்கு சவால் விட்ட சஜித்!

Editor