பிரதான செய்திகள்

குற்றங்களை ஒப்புக்கொண்டு விக்னேஸ்வரன்

தன் மீதான குற்றங்களை விக்னேஸ்வரன் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

இதன் போது வட மாகாண எதிர்க் கட்சித் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பிலும், அவரின் கேள்விகள் தொடர்பிலும் உரையாற்றிய முதலமைச்சரின் கருத்துக்களுக்கு பதில் அளித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக இன்று முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை.

வட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர் பதவிகளை வகிப்பவர்கள் சீரான முறையில் ஆடை அணிவது சிறப்பாக இருக்கும் .

Maash

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

wpengine

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு!

Editor