பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு மின்சார சலுகை வழங்க அமைச்சர் நடவடிக்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை வழங்குவதற்காக நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது தொடர்பில் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

wpengine

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

திருக்கோவில் தமிழ் பாடசாலை முஸ்லிம் ஆசிரியருக்கு தொழுகைக்கு செல்ல மறுப்பு-உலமா கட்சி கண்டனம்

wpengine