பிரதான செய்திகள்

குர்ஆனை தடைசெய்யும் பேச்சுவார்த்தையில் பொது­ப­ல­சேனா மற்றும் சிங்­கள ராவய

இலங்­கையில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு ஒரு சட்டம் பெளத்­தர்­க­ளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடி­யாது. முஸ்­லிம்­களின் புனி­த ­குர்­ஆனின் சட்­டங்கள் இலங்­கையின் சட்­டங்­க­ளுக்கு சில வகை­களில் முர­ணாக அமைந்­துள்­ளன.

பொது­ப­ல­சேனா அமைப்­புடன் இணைந்து சிங்­கள ராவய அமைப்பும் இலங்­கையில் குர்­ஆனை தடை செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளது. என சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார்.

புனித குர்­ஆனை இலங்­கையில் தடை­செய்ய வேண்டும் என்ற பொது­ப­ல­சே­னாவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றிலே அக்­மீன தயா­ரத்ன தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அறிக்­கை­யில் ­மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது இலங்கை பல மதங்­களைக் கொண்ட நாடாக இருக்­கலாம். ஆனால் சட்­டங்கள் இனங்­களின் அடிப்­ப­டையில் வேறு­பட்­ட­தாக இருக்க முடி­யாது.

அனை­வ­ருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான முஸ்லிம் சட்­டங்கள் இருக்­கின்­றன.

முஸ்லிம் ஆண் ஒரு­வ­ருக்கு நான்கு பெண்­களை மனை­வி­யர்­க­ளாக வைத்துக் கொள்ள முடி­கி­றது. இது இஸ்­லா­மிய சட்டம் இந்தச் சட்டம் பௌத்­தர்­க­ளுக்­குள்ளும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஒரு பௌத்தர் 4 மனை­வி­யர்­களை வைத்துக் கொள்ள வேண்­டு­மென்றால் அதற்­கென்றே மதம் மாறு­கிறார். இஸ்­லாத்­துக்கு மாறி நான்கு திரு­மணம் செய்து கொள்­கிறார்.

இலங்­கையில் முஸ்­லிம்கள் மாத்­திரம் தான் பள்­ளி­வா­சல்­களை மூடிக்­கொண்டு இர­க­சி­ய­மாக மத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். ஏனைய இந்து, கிறிஸ்­தவ மதங்­களில் இவ்­வா­றல்ல அவர்­களின் வணக்க வழி­பா­டுகள் திறந்­த­ன­வாக அமைந்­துள்­ளன. எனவே பௌத்த மக்கள் முஸ்­லிம்கள் மீது சந்­தேகம் கொள்­வ­தற்கு இது கார­ணமாக அமைந்­துள்­ளது.

மனி­தப்­ப­டு­கொ­லை­களைப் புரியும் ஐ.எஸ்.மற்றும் ஜிஹாத் தீவி­ர­வா­திகள் அல்­லாஹு அக்பர் என்று கூறிக் கொண்டு குர்­ஆ­னையும் கையி­லேந்­தி­யி­ருக்­கின்­றனர்.

இது குர்ஆன் மீது சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

குர்ஆன் தீவி­ர­வா­தத்­தையே போதிப்பதாக ஊகிக்க முடிகிறது. அதனால் குர்ஆன் தொடர்பில் சிங்கள ராவய பலஆய்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு குர்ஆன் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி செயற்படும் என்றார்.

Related posts

பந்துலவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் – வடக்கின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர கோரிக்கை!

Editor

பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை! நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

wpengine

அரசியல்வாதிகள், உலமாக்கள், செல்வந்தர்கள் சமுதாய நலனுக்காக ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்-றிஷாட்

wpengine