பிரதான செய்திகள்

குரங்கு தொல்லை! குரங்கு அமைச்சை வழங்குவதாயின் ஏற்றுக்கொள்ள தயார்

நாட்டில் அதிகரித்துள்ள குரங்கு தொல்லைகளுக்கு தீர்வைப்பெற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம் என்பதால் தனக்கு ‘குரங்கு அமைச்சர்’ பதவியை வழங்குவதாயின் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் விளைச்சல்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பினால் 60 சதவீதமான பயிர்கள் நாசமடைவதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

குரங்குகளின் தொல்லையினால் பதுளைக்கு மாத்திரம் பாதிப்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். அவை கொழும்புக்கும் வந்துள்ளன.


ஹோமாகம, மத்தேகொட போன்ற பிரதேசங்களிலும் குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு வெகுதூரம் இல்லை. எனவே எதிர்வரும் காலங்களில் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் அவை நாடாளுமன்றத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்றார்.


நாட்டில் பெரும் பிரச்சினையாகியுள்ள யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டத்தை நிறுத்துவதற்கு அதற்காக பிரத்தியேகமாக ஓர் அமைச்சரை ஜனாதிபதி நியமித்தார். இது மக்களுக்கு தொல்லை தரும் பாரிய பிரச்சினை அதேபோல, மட்பாண்ட கைத்தொழில், பத்திக் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர்களை நியமித்தார்.

இதனை பலர் கேலி செய்தபோதிலும், இவ்வாறு பிரத்தியேகமாக அமைச்சுகளை வழங்கியதால் அதற்கான பணிகள் சிரப்பாக
இந்த நியமனங்களால் இனிவரும் காலங்களில் குறித்த துறைகளில் வேலைத்திட்டங்கள் முறையாக இடம்பெறும். அதுபோல குரங்கு பிரச்சினைகளை எந்த அமைச்சும் பொறுப்பேற்க வில்லையாயின் அதற்காக பிரத்தியேகமாக அமைச்சுப் பதவியை வழங்கினால் அதனை ஏற்க நான் தயார். ஏனெனில் அந்த பாதிப்பை என்னால் உணரமுடிகிறது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றிய அமைச்சர் றிஷாட் தலைமையிலான அ.இ.ம.கா

wpengine

நிதி வேண்டி அலி தலைமையிலான குழு வொசிங்டன் நோக்கி பயணம்.

wpengine

சிரியாவில் குண்டுவெடிப்பு; 101 பேர் பலி

wpengine