பிரதான செய்திகள்

குடும்பப் பெண்ணுடன் தர்க்கம் செய்த முகாமையாளர்,உதவி முகாமையாளர்

வவுனியாவில் நுண்நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்தவதற்குச் சென்ற குடும்பப் பெண் ஒருவருடன் அங்கிருந்த முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முற்பகல் சாந்தசோலைப் பகுதியிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் நுண்நிதி நிறுவனம் ஒன்றில் பெற்றுக்கொண்ட கடன் பணத்தினைச் செலுத்துவதற்குச் சென்றுள்ளார்.

இதன்போது முகாமையாளரை சந்திக்குமாறு உத்தியோகத்தர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முகாமையாளரைச்சந்தித்த போது,
குறித்த நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் சாந்தசோலைக்கிராமத்திற்கு நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் பணம் பெறுவதற்கும், கடன் வழங்குவதற்கும் செல்லக்கூடாது என்று அங்குள்ள மாதர் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு தமது செயற்பாடுகளை நிறுவனங்கள் குறைத்துக்கொண்டன.
இந்நிலையில், கடன் பெற்றவர்கள் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு அலுவலகங்களுக்குச் சென்றபோது குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் சனசமூக நிலையத்தில் உறுப்பினராக செயற்படுகின்றார்.

எனவே அவரே தங்களின் செயற்பாட்டிற்கு அங்குள்ள ஏனைய அமைப்பினருடன் இணைந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, கடனைச் செலுத்தச் சென்றபோது, முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் குறித்த குடும்பப் பெண்ணுடன் நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி

wpengine

ISIS தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்குண்டு -அமெரிக்க அதிபர் ஒபாமா

wpengine

வடபுல முஸ்லிம்களை பற்றி கரிசனை எடுக்காத ஐ.நா. பிரதிநிதிகள் அமைச்சர் றிஷாட் விசனம்

wpengine