உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குடியரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தற்சமயம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்கும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகின்றது.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பினை குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக்கட்சி ஆகியன நடத்தியிருந்தன.

இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதியான கிளின்டனின் மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டினர் மற்றும் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளவர்கள் தொடர்பில் சர்சைக்குரிய பலகருத்துக்களை வௌியிட்டுவரும் டொனால்ட் ட்ரம்ப் ஒருதரப்பினரின் எதிர்ப்பினை சம்பாதித்துவருகின்றார்.

இதேவேளை ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வௌிப்படையாக ஆதரவு தெரிவித்துவருகின்மை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine

வெடிக்கும் ஐபோன் 7

wpengine

கா.பொ.த. (உ/த)  பரீட்சை! பர்தா விடயத்தில் இடை­யூ­று­கள் விளை­விக்க வேண்டாம்

wpengine