பிரதான செய்திகள்

கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் செழிப்புறும் கல்குடா

(எம்.ரீ. ஹைதர் அலி)

கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டின்கீழ் கல்குடாத்தொகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் Z.A. நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் ஆகியோரின் தலைமையில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் கட்டடட பணிகளுக்காக 7 கோடி 65 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் (2016.11.09ஆந்திகதி – புதன்கிழமை) அடிக்கல்கள் நடப்பட்டன.

மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக்கிராமத்திலுள்ள மட்/மம/ரிதிதென்ன இக்றா வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்காக 80 இலட்சம் ரூபாவும், மட்/மம/கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஆரம்ப கற்றல் வள நிலையம் அமைப்பதற்காக 85 இலட்சம் ரூபாவும், மட/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்காக 2 கோடி ரூபாவும், மட்/மம/பிறைந்துறைச்சேனை அஸ்கர் மகா வித்தியாலயத்தில் வெவ்வேறு இரண்டு மாடி கட்டிடங்கள் அமைப்பதற்காக 4 கோடி ரூபாவும் நிதி ஒதிக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அடிக்கல்கள் நடப்பட்டன.

unnamed-3

நடைபெற்ற இவ்அபிவிருத்தி பணிகளுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் Z.A. நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. சிப்லி பாறுக் அவர்களும் கலந்துகொண்டதோடு, ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பணிப்பாளர் M.I. சேகு அலி, மாவட்ட பாடசாலைகள் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்A.M.M. ஹக்கீம், கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி M.L.M. ஜுனைட் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் K.B.S. ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.unnamed-1

மேலும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பள்ளிவாயல்களின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.unnamed

Related posts

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine

225 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்! ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்கு தானம் செய்யவில்லை

wpengine

நாடு மீண்டும் இரண்டுபட ஆரம்பித்துள்ளது முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே – சஜித்

wpengine