பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கு எதிராக அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

(அனா)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் நடவடிக்கையை எதிர்த்து ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள இருபத்தாறு பாடசாலைகளின் அதிபர்களும் நேற்று (27.09.2016) கடமைக்கு செல்லாமல் சுகயீன லீவில் நின்று தங்களது எதிரிப்பினை வெளியிட்டனர்.


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கடந்த (26.09.2016) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த வேளை அங்கு உயர் கல்வி கற்றும் மாணவிகள் எங்களுக்கு அரசியல் விஞ்ஞான பாடம் கற்பித்த ஆசிரியை இடமாற்றம் பெற்று சென்றுள்ளதாகவும் அதனால் கடந்த ஒரு மாதகாலமாக பாடம் இடம் பெறவில்லை என்றும் அதனால் எங்களுக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்து தருமாரும் மாகாண சபை உறுப்பினரிடம் கோறிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று வலய கல்வி பணிப்பாளருடன் இது தொடர்பாக உறையாடும் போது மகாண சபை உறுப்பினர் வலய கல்வி பணிப்பாளரை தகாதவார்த்தைப் பிரயோகங்களை பாவித்தார் என்றும் அதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வலய கல்வி பணிப்பளரிடம் மண்ணிப்பு கோற வேண்டும் என்றும் கோறி  சுகயீன லீவில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பாடசாலைகளின் அதிபர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்ததோடு இது தொடர்பான மகஜர் ஒன்றினை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜூனையிட்டிடம் கையளித்தனர்.unnamed-1

unnamed-2

unnamed-4

Related posts

WhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்

wpengine

றிசாத் பதியுதீன் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வும் கற்றல் உபகரணம் வழங்கலும்

wpengine

இனவாதம் பற்றி பேச பிக்குகளுக்கு உரிமை இல்லை -ராஜித

wpengine