பிரதான செய்திகள்

கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளரிடம் தோற்றுப்போன ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண ஆளுநர்
ஹிஸ்புல்லாவிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் மன்சூர் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து கிழக்கு ஆளுநருக்கு எதிராக கல்விப் பணிப்பாளர் மன்சூர் வழக்குத் தொடர்ந்திருந்தார் .

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் பதவி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் (20/05/2019) நேற்று வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 01/07/2019 வரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மன்சூர் தொடர்ந்தும் பதவி வகிக்கலாமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், ஆளுநருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள குறித்த வழக்கு 01/07/2019 அன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine

நான் குற்றமற்றவன்! ரவி கருணாநயக்க பதவி விலகல்

wpengine

அமைச்சின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் டெனிஸ்வரன் பங்கேற்பு

wpengine