பிரதான செய்திகள்

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

(அஸ்லம் மௌவுலானா)
கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் வைபவமும் தேசிய கல்விக் கல்லூரி முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் தொடர்பிலான நினைவுப் பேருரை மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று ரீ.எப்.சி.மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் அதிதியாக கலந்து கொண்டு மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் தொடர்பிலான நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எம்.எப்.றிபாஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவிஞர் அன்புடீன், அமைப்பின் உப தலைவர் எஸ்.எல்.மன்சூர், நிர்வாகச் செயலாளர் செயிட் அஸ்லம் மௌலானா ஆகியோரும் உரையாற்றியதுடன் மார்க்க சொற்பொழிவு மற்றும் துஆப் பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன.
இதில் பிராந்திய ஊடகவியலாளர்களுடன் உலமாக்கள், கல்விமான்கள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Related posts

60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி!

wpengine

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine

கொவிட் தொற்று; குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!

Editor