பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே தினமான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

Related posts

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

wpengine

விஷேட தேவை உடைய மாணவர்களுக்கான பாடசாலை மன்னாரில்

wpengine

லசந்த விக்ரமதுங்கவின் மகள், சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரிணிக்கு கோரிக்கை.

Maash