கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல் இன்று . ..!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்று (17) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேலமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்களின் பங்கேற்போடு, இரு சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நண்பகல் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

wpengine

வவுனியா மாநகரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கான (Digital) கடிகாரம்.

Maash

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு;

Editor