பிரதான செய்திகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக் கொண்ட அமைச்சர், கடும் மழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வகையில் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே வேளை இந்தப் பிரதேசங்களின் நிலைமை குறித்து முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நந்தன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

வெள்ளத்தின் காரணமாக விளங்குளம் பகுதியில் உள்ள பதினாறு குடும்பங்கள் இருப்பிடம் இழந்து பிற இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாவும், வவுனிக்குளத்தில் நன்நீர் மீன் வளர்ப்பில் ஈடுபடும் அம்பாள் குள மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் வலைகள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் நந்தன் தெரிவித்தார்.

“பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மாந்தை கிழக்கிற்கான வீதிப் போக்குவரத்து தடைப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்த தவிசாளர் நந்தன் தொண்டர் நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

(2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை.!

Maash

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை நியமிக்க சுதந்திர மக்கள் சபை தீர்மானம்!

Editor

முஸ்லிம் ஜனாஷாவை அடக்கம் செய்வதை கைவிடவேண்டும்.

wpengine