பிரதான செய்திகள்

கிளிநொச்சி சமுர்த்தி நியமனம் கவனம் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் 5 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் தற்போது 68 வெற்றிடங்கள் காணப்படுகிறன.

ஆனால் கடந்த 15ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் வைத்து நாடளாவிய ரீதியில் சமூர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5 நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ். மாவட்டத்திற்கு 45 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 42 பேருக்கும் சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கிளிநொச்சியில் வெற்றிடம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் நியமனம் மிகமிக குறைவாக வழங்கப்படுட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய சமூர்த்தி நியமனம் தொடரபில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தாமையும் இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டதில் 2015ஆம் ஆண்டு 11734 சமூர்த்தி பயனாளிகள் குடும்பங்கள் காணப்பட்ட போதும் தற்போதும் அவற்றில் குறைவு ஏற்பட்டு 11556 ஆக காணப்படுகிறது.

Related posts

மு.கா தலைவரின் சுய நல அரசியலின் வெளிப்பாடு – மீரா.எஸ். இஸ்ஸடீன்

wpengine

வெள்ளிமலை காணி அபகரிப்புக்கு எதிராக முசலி மக்கள் குரல்கொடுக்க வேண்டும்! சமுகத்தின் பிரச்சினை

wpengine

வர்த்தகர் சகீப் சுலைமான் தலையில் அடித்தே! கொலை

wpengine