பிரதான செய்திகள்

கிளிநொச்சி கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் – சாரதிக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல்!

பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி,பளை முல்லையடி பகுதியில் (05-07-2023)  துவிச்சக்கர வண்டியில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த சிறுவனை வேகமாக வந்த கப்ரக வாகனம் மோதி தள்ளியுள்ளது.

இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது விபத்தை ஏற்படுத்திய சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்றைய தினம் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து  சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது.

Related posts

ஹக்கீம் ஹசனலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-01)

wpengine

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

wpengine

மன்னார் நகர சபை ஊழியரின் அசமந்தபோக்கு! இரானுவ சாவடி சேதம்

wpengine