பிரதான செய்திகள்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் நீரில் முழ்கியுள்ளது

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆவணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் இரணைமடு குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கனகராயன் ஆற்றுப்படுக்கை அண்டிய கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் நேற்று பிற்பகல 1.00 மணியளவில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டதால் அங்கிருந்த உத்தியோகத்தர்களும், ஒரு சில ஆவணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine

மன்/அலாவுதீன் பாடசாலையினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பஸ்களை இயக்கத் திட்டம்.

Maash