பிரதான செய்திகள்

கிளிநொச்சி இராமநாதபுரம் பழைய கண்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்

வடமாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு  மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள தலா 6 மில்லியன் ரூபா நிதியில் இருந்து வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் தவநாதன் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட மேற்படி வீதி புனரமைப்பு ஆரம்ப கட்ட அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த (10.06.2016) ஆம் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி விவசாய கல்லூரியின் அதிபர் சகிலா பாணு, கிளிநொச்சி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி திணைகளத்தின் பிரதம பொறியியலாளர் ஜெகநாதன் மற்றும் கிராம மட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.0c8357f3-7ff5-4573-9593-1c642ce2973c

மேற்படி வீதியானது பாடசாலை, சந்தை தொகுதி என்பவற்றுக்கான பிரதான வீதியாக காணப்படுவதனால் இதனூடாக பயணம் செய்வதற்கு மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு 900மீட்டர் வீதி புனரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  45df2452-b862-484f-bd31-5c999b654310

Related posts

கட்டிடம் கட்ட கிரிக்கெட் போட்டி நடாத்தும் தென்னிந்திய நடிகர்கள்

wpengine

புத்தளம்- கல்பிட்டி பகுதியில் 800 கிலோ கிராம் மஞ்சள் கடத்தல்!

wpengine

வெள்ளக்காடாகிய மல்வானை! எப்போது தீரும் இந்த அவலம்

wpengine