பிரதான செய்திகள்

கிரிடம் இன்னும் எமது கைகளிலேயே உள்ளது. தேவை ஏற்பட்டால், முடிக்குரிய இளவரசனை தேடவும் நேரிடலாம்

தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் செய்ய வேண்டியது சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவது அல்ல எனவும் தொற்று நோயில் இருந்துமக்களை காப்பற்ற கூடுமான விரைவில் மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதை மேற்கொள்ள வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

60 சத வீதமான மக்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும் என அரசாங்கம் கூறினாலும் இதுவரை 6 வீதம் என்ற குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் தம்மை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்கவே தமது வாக்குகளை வழங்கி ஒரு பகுதியினரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். எனினும் தற்போதைய அரசாங்கம் மாங்காய் பற்றி பேசும் போது சுரக்காய் பற்றி பேசும் நிலைமைக்கு சென்றுள்ளது.

காணப்படும் குறைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் சத்தமிட்டு கூறினாலும் அதிகாரிகளுக்கு அவை புரியவதில்லை. இப்படியான நிலைமையிலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் அவசியமில்லை.

எனினும் கிரிடம் இன்னும் எமது கைகளிலேயே உள்ளது. தேவை ஏற்பட்டால், முடிக்குரிய இளவரசனை தேடவும் நேரிடலாம் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிராம உத்தியோகத்தரை மிரட்டி 9மாதம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ்

wpengine

பேஸ்புக் பிரதிநிதிகள் நாளை இலங்கை நோக்கி பயணம்

wpengine

புலிப் பூச்சாண்டி காட்டும் மஹிந்த

wpengine