பிரதான செய்திகள்

கிண்டல்களை தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை

இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் 12ஆம் வகுப்பில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்றுள்ளார்.

அப்பாவியான தோற்றத்தை கொண்ட இந்த மாணவனை பலர் துன்புறுத்துவதனை வழக்கமாக கொண்டுள்ளார். கடற்படையில் பணியாற்றிய மாணவனின் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மாணவன் லசிதவின் மூத்த சகோதரர் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி வருகிறார்.
கடந்த 9ஆம் திகதி லசிதவின் பெற்றோர் ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வீட்டில் லசித மற்றும் அவரது பாட்டியே இருந்துள்ளனர். காலை உணவு பெற்று கொள்வதற்காக பாட்டி லசிதவை அழைத்துள்ளார். இதன் போது லசித ஏதோ புத்தக்கத்தில் எழுதி கொண்டிருந்ததனை பாட்டி அவதானித்துள்ளார்.

அரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தனது பேரனை அழைக்க சென்ற பாட்டி அதிர்ச்சியான சம்பவத்தை ஒன்றை பார்த்துள்ளார்.
புத்தகத்தை மேசை மீது வைத்து விட்டு லசித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதனையே பாட்டி அவதானித்துள்ளார்.

வைத்தியராகும் கனவில் இருந்த லசித் சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றிருந்த நிலைமையில் உயர்தரத்திற்கு விஞ்ஞான பிரிவை தெரிவு செய்துள்ளார்.

தூக்கிட்ட மாணவனுக்கு அருகில் இருந்த புத்தகத்தில் சில முக்கிய விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் “ வகுப்பறையில் யாரும் எனக்கு ஒன்றும் கூறவில்லை. ஒருவருடன் பேசினால் என்ன நடந்து விடப் போகின்றது. நான் தான் வேண்டும் என்று பேசியதாக எனக்கு தொல்லை கொடுக்கின்றார்கள். நான் எந்த் தவறும் செய்யவில்லை.

சத்தியமாக எனக்கு படிக்க விரும்பம் இல்லை. நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.

“எனது தொலைபேசியை அக்காவுக்கு கொடுங்கள். எனது Bio Free Cardயை பிரதீப் என்பவருக்கு கொடுங்கள்” என இது போன்ற பல குறிப்புகளை அவர் தனது புத்தக்கத்தில் எழுதியுள்ளார்.

Related posts

கோத்தா அரசாங்கத்தில் நாடாளுமன்ற குழுவில் முன்னால் அமைச்சர் றிஷாட்டின் பெயரும்

wpengine

இந்தியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க உப தலைவராக ஹக்கீம்

wpengine

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம்! குழு நியமனம்

wpengine