செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கிணற்றில் குடும்பப் பெண்ணின் சடலம்!! யாழ் பகுதியில் சம்பவம்.

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது 55) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். நேற்று காலை அவரை காணவில்லை.

அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்டார். சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Related posts

சவுதியில் மரணமான இலங்கைப் பெண் குறித்து விஷேட விசாரணை

wpengine

அநுராதபுரம் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளர்கள்!

Editor

முரட்டுத்தனமாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – வீடியோ இணைப்பு

wpengine