உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் விவகாரம்:ஜனாதிபதியை சந்தித்து பேச வேண்டும் – உமர் அப்துல்லா

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை நீடிக்கிறது.இது குறித்து ஸ்ரீநகரில் காஷ்மீர் மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி விவாதித்தனர். இதில் காங்கிரஸ் தலைவர் மிர், தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., முகமது யூசுப் தாரிகமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் கள நிலவரம் குறித்து சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்துக்கு பின்னர் உமர் அப்துல்லா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘காஷ்மீரில் நிலவுகிற உண்மை நிலை குறித்து விளக்குவதற்கு ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி கேட்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறினார். காஷ்மீர் பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இதை ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

wpengine

அமீர் அலிக்கு முதலமைச்சர் ஹாபீஸ் பதில் சொல்லதேவையில்லை

wpengine

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

wpengine