உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் மக்களுக்காக நவாஷ் சரீப் ஐக்கிய நாடு சபைக்கு கடிதம்

இஸ்லாமாபாத்- ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சர்வதேச அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை காஷ்மீரில் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related posts

சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் தகுந்த தண்டனைகள் வழங்குவதன் மூலம் சிறந்த பாடம் கற்பிக்கப்படல் வேண்டும்-அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine

நல்லாட்சியின் பின்னால் இருந்து கொண்டு தவறு செய்ய இடமளிக்கப்படாது!

wpengine

ரூபா வீழ்ச்சி! கடும் பொருளாதார நெருக்கடி

wpengine