பிரதான செய்திகள்

காலி முகத்திடல் இளைஞர்களுக்கு மஹிந்த அழைப்பு! நான் பேச தயார்

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

” இளைஞர்கள் முன்வந்தால் அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன்.” – என்று மஹிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

விவசாயிகளையும்,நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி

wpengine

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற புதுவருட நிகழ்வு!

Maash