பிரதான செய்திகள்விளையாட்டு

காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!

2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பாடிய காலி டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 48 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தம்புள்ளை அணியின் ஷாநவாஸ் தஹானி 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் காலி அணியின் தசுன் ஷானக்க 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, இந்த போட்டிய சமநிலையில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, போட்டி சுப்பர் ஓவராக நடத்தப்பட்டது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி ஒரு ஓவரில் 09 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய காலி டைட்டன்ஸ் அணி சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

Related posts

சிங்கள கடிதத்தினால் தமிழ் பேசும் சமூகம் அசௌகரியம்

wpengine

அரசியல்வாதிகளை தோற்கடிக்க பௌத்த பிக்குகள் முன்வருவார்கள்

wpengine

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!

Editor