பிரதான செய்திகள்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம்.

(அனா)
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் ஆறு நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிர் இழந்த பரிதாக சம்பவம் இன்று (திங்கள் கிழமை) மாலை இடம் பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதிதில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற பாடசாலை மாணவியே காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (திங்கள் கிழமை) மாலை உயிர் இழந்துள்ளார் இச் சிறுமி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

மரணமடைந்த வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதிதில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற சிறுமி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

wpengine

ஜெயலலிதா மறைவு! அதிர்ச்சியில் 19 பேர் பலி

wpengine

ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.

wpengine