பிரதான செய்திகள்

காத்தான்குடியில் உண்டியல் திருட்டு! பொலிஸ் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட பாலமுனையில் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட 63 வயது நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் வினோபா இந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


பாலமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலின் உண்டியலையே மேற்படி நபர் உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


குறித்த பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராவின் உதவியுடனேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் வழிகாட்டலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Editor

அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படலாம்

wpengine

ஜனாதிபதிக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எனது கூட்டத்தை பார்த்தவுடன் மஹிந்த

wpengine