பிரதான செய்திகள்

காத்தான்குடி – 06 தோனா வீதியின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள காத்தான்குடி-06 தோனா வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டதோடு, மழைக் காலங்களில் அதிகளவான மழைநீர் தோனாவிற்கு வடிந்தோடாமல் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் பாரிய இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினையடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டு 10 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.
இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் அன்மையில் இவ்வீதிக்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டு இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
தற்போது இவ்வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் புனரமைப்பு பணிகள் தன்னுடைய ஆலோசனைகளுக்கமைவாக சரியான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதனை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த இடத்திற்கு 2016.09.08ஆந்திகதி விஜயம்செய்து நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தோணா வீதி புனரமைப்பு வேளைகளில் ஈடுபடும் கொந்துராத்து காரர் ஆகியோரை அழைத்து வீதி புனரமைப்பு வேலைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.unnamed-2
இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் திருப்திகரமான முறையில் நடைபெற்று வருகின்றது என்பதனை உறுதிசெய்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இப்புனரமைப்பு வேலைகள் முழுமையாக நிறைவுறும் வரை தன்னுடைய நேரடி மேற்பார்வையின் கீழ் சிறந்த விதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.unnamed

 

Related posts

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

மன்சூரின் காடைத்தனம் இனியும் செல்லாது.

wpengine

35 பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி

wpengine