பிரதான செய்திகள்

காணிப்பிரச்சினை! புத்தளம்,முந்தல் கிராம அதிகாரி மீது தாக்குதல்

புத்தளம் – முந்தல், நவூடான்குளம் பகுதியிலுள்ள அரச காணியொன்று தொடர்பில் முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.

முந்தல் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், இன்று நண்பகல் குறித்த காணியைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது, மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரி மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரி, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக  அறியமுடிகின்றது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட பிரதேசவாசி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நவூடான்குளம் பகுதியிலுள்ள 6 ஏக்கர் அரச காணியைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நவூடான்குளம் பகுதியில் வசிக்கும் காணியற்ற சுமார் 50 குடும்பங்களுக்கு அந்தக் காணியை பிரித்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமது கோரிக்கை தொடர்பில் உரிய தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி, மக்கள் கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த காணி சதுப்பு நிலம் என்பதால் அதில் மக்கள் வசிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்  கூறியிருந்தார்.

Related posts

முசலி பிரதேசத்தில் சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம்

wpengine

முன்னால் உறுப்பினர்களுக்கு வெளிவந்த ஆப்பு

wpengine

கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

wpengine