(அபூ செய்னப்)
தனிப்பட்ட நலனுக்காக சோரம் போகின்ற கேவலம் என்னிடமில்லை.அது எமது சமூகத்தை காட்டிக்கொடுப்பதோடு,சுயநலத்தி
நேற்று (12.07.2016) செவ்வாய்கிழமை மீராவோடை அமீர் அலி கலாசார மண்டபத்தில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் மீராவோடை மேற்கு அபிவிருத்திக்குழு தலைவர் ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது உரையாற்றிய கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஐ.எல்.பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்
இந்தக் கல்குடாவிற்கு அரசியல் அந்தஸ்தையும்,அபிவிருத்தியின் அடையாளத்தையும் இணங்காட்டிய பெருமை பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களையே சேரும்,அந்த நன்றிக்கடனை கல்குடா சமூகம் என்றும் மறக்கக்கூடாது. இந்தப்பாதைகள் அழகாக செப்பனிடப்பட்டுள்ளைமைக்கும்,
நாங்கள் எப்போதும் எங்கள் பிரதேசத்தை மையப்படுத்தியே செயற்படுவோம். எங்களையும்,எங்கள் பிரதேசத்தையும் நேசிக்கின்ற,அறிந்த,அபிவிருத்தி செய்கின்ற எங்கள் தலைமையான பிரதியமைச்சர் அமீர் அலி இருக்கிறார். இந்தத் தலைமையுடன் கைகோர்த்து, விசுவாசமுள்ளவர்காக இருப்போம். மீராவோடை மக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கிறார்கள்.அது எமது கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை யாருக்காகவும்,எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாடே அது. சுயலாபத்திற்காக கட்சி மாறியவர்களுக்கு மங்கள் நலன்பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை. எதிர்வரும் காலங்கள் அவர்களுக்கு தகுந்த பதிலினை அளிக்கும் என நான் நம்புகிறேன்.
பிரதி அமைச்சரின் மூலமாக பல வரப்பிரசாதங்களை அனுபவித்து விட்டு, சிறிய முரண்பாடுகளுக்காக,அல்லது இதனைவிடவும் அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கில் செயற்படும் இவ்வாறானவர்களை, எமது பிரதேசத்தின் அரசியல் வழிகாட்டிகளாக நாம் தெரிவுசெய்து கொண்டது எமது பிழையான தெளிவாகும். எதிர்காலத்தில் இவ்வாறான நிலவரங்கள் நிகழாமல் எமது பிரதிநிதித்துவத்தை நாம் பாதுகாக்குகின்ற விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். இதுவிடயத்தில் நாங்கள் எங்கள் சுயலாபத்திற்காக இயங்காமல் எமது சமூகத்தின் அபிவிருத்திக்கு, கல்வி மேம்பாட்டுக்கு,இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு என ஒற்றுமையுடன் செயற்படுவோம். அந்த ஒற்றுமையான நகர்வு எமது கல்குடாவின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களின் தலைமையிலான நகர்வாக இருக்கும் என அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி, மீராவோடை மேற்கு,கிழக்கு அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான ஜனாப் முபாரக் மற்றும் ஜனாப் சித்தீக் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் அல்ஹாஜ் அலியார், அஸ்மி , உதவி திட்டப் பணிப்பாளர் றுவைத், மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் முன்னாள் தலைவர் மஹ்மூத் ஹாஜி, அமீர் அலி வித்தியாலயத்தின் அதிபர் மஹ்றுப் உதுமான் வித்தியாலய அதிபர் முபாரக் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.