செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

கழுத்தில் கத்திவைத்து நகை பறிப்பு!!! – பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.

பொன்னகரில் கழுத்தில் கத்திவைத்து நகை பறித்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சென்றுபார்வையிட்ட ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் பகுதியில் சிலநாட்களுக்குமுன்னர் வீதியால் உந்துருளியில் வந்தபெண்ணை திருடர்கள் வழிமறித்து குறித்தபெண்ணின் கழுத்தில் கத்திவைத்து நகைகளைத் திருடியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் குறித்த திருடர்களை மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முள்ளியவளை, பொன்னகர் பகுதியைச்சேர்ந்த குறித்த பெண்ணை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 17.07.2025 நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் இதன்போது கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன் இந்தச்சந்திப்பில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

3 ஆம் திகதிக்குள் வடக்கு மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி

wpengine

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

wpengine

ரணிலின் பொறியில் சிக்கிய எலி

wpengine