பிரதான செய்திகள்

கழிவு நீரை அகற்ற முடியாத முசலி பிரதேச சபை நிர்வாகம்! பிரதேச மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பல கிராமங்களில் கழிவு நீர் அகற்றமுடியாமல் முசலி பிரதேச மக்கள் பல சிறமங்களை எதிர் நோக்கி வருகின்ற போது முசலி பிரதேச சபை இதுவரையில் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மழை காரணமாக பல கிராங்களில் உள்ளக வீதிகளின் நீர் மட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

முசலி பிரதேச சபையில் கழிவு நீர்களை அகற்ற பல இயந்திரங்கள் இருந்தும் அதனை பிரதேச சபையின் நீர்வாகம் இது  வரையில் மேற்கொள்ளவில்லை என அறியமுடிகின்றன.

எனவே கழிவு நீர்களை அகற்ற முசலி பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது போன்ற கழிவு நீரை அகற்றும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மேற்கொண்டுவருகின்றார்.

இவ்வாறு முசலி பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள் ஏன் வாக்களித்த மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ள  முன்வருவதில்லை?

Related posts

ICC தலைவர் பொறுப்பில் இருந்து மனோகர் திடீர் விலகல்!

wpengine

ஹர்த்தாலுக்கு மன்னார் நகரில் ஆதரவு

wpengine

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

wpengine