பிரதான செய்திகள்

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தடையுத்தரவை நீடித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரால் அம் மாகாண கல்விப் பணிப்பாளராக நிசாம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந் நியமிப்பு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று முந்தினம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதன்போது வழக்கினை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், ஆளுநரின் நியமிப்பிற்கு இடைக்காலத் தடையுத்தரவினை நீடித்தார்.

இதனடிப்படையில், 20.5.2019 வரை இத் தடையுத்தரவு நீடிக்கும் என்றும், 20.5.2019 வரை மஞ்சூர் என்பர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தொடர்வார் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை குறித்த வழக்கானது 20.5.2019 வரைக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related posts

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

wpengine

இழப்பீடுகள் அலுவலக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்…

Maash

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

wpengine