பிரதான செய்திகள்

கல்வி சமூகத்தினை மென்மேலும் உயர்த்த வேண்டும் அடைக்கலம் பா.உ

தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்ற ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார், அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறப்பு விழா நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

எங்களுடைய உறவுகள் மற்றும் உடமைகள் இல்லாமல் போயுள்ளன. ஆனால் கல்வி என்பது ஒரு வரப்பிரசாதமாக இன்றைக்கும் எங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

பாடசாலை நிகழ்வுகளுக்கு செல்கின்ற போது நான் ஆசிரியர் சமூகத்தை மகிழ்ச்சியுடன் நினைத்து பார்ப்பதுண்டு.

அந்த ஆசிரியர்களின் குடும்ப பொறுப்பு, குடும்பச் சுமை அவர்கள் மத்தியில் இருக்கின்ற போதும் அதனை ஒருபுறம் வைத்து விட்டு தமக்கு கொடுக்கப்படுகின்ற பொறுப்புக்களை திறம்பட செய்து முடிக்கின்றனர்.

தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்றனர். இந்த சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.

எனவே கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த ஆசிரியர் சமூகம் மீது கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு நன்றி கூறுகின்றேன். பல அமைச்சுக்கள் இந்தப்பக்கம் வருவது இல்லை.
ஆனால் கல்வி இராஜாங்க அமைச்சர் வருகை தந்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

தொடர்ந்தும் வர வேண்டும். இந்த கல்வி சமூகத்தினை மென் மேலும் உயர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நானாட்டானில் கால்நடை வைத்திய சேவை

wpengine

மன்னாரில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது!

Editor

மன்னார் காற்றாலை! கட்டுப்பாட்டு விலை தொடர்பாக ஆலோசனை

wpengine