பிரதான செய்திகள்

கல்முனை விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா,வியாழந்திரன்

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் தேர்தல் காலத்தில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் வழங்கிய வாக்குறுதிகள் பொய்துப் போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும், கல்முனை பிரதேச செயலகத்தை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பெற்றுத்தருவோம் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மாதங்கள் கடந்து எத்தனையோ வருடங்களும் கடந்து விட்டன. அதைப்பற்றி பேசுவதற்கு இவர்கள் பயப்படுகிறார்கள்.

அதேபோன்று தான் கருணாவும் கூட தான் வெற்றியீட்டினால் அல்லது அரசாங்கம் வெற்றி பெற்றால் கல்முனை பிரதேச செயலகத்தை மிகவும் சாதாரணமாக தான் பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தார்.

இப்போது மக்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் அவருடம் முடங்கி போயிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். 

Related posts

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி போட்டி (படம்)

wpengine

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்ய புதிய நடைமுறை

wpengine