பிரதான செய்திகள்

கல்முனை சாஹிராக் கல்லுாாி கொழும்புக் கிளையின் அதிபா் நியமனம் பற்றிய கூட்டம்

(அஷ்ரப் ஏ சமத்)

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இப்தார் நிகழ்வும் கொழும்பில் (8) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், கொழும்பு கிளையின் முன்னாள் நிருவாக சபை உறுப்பினர்கள், டாக்டர்ஸ் போரம் பிரதிநிதிகள்,  என்ஜினீயர்ஸ் போரம் பிரதிநிகள், சட்ட வல்லுநர்கள், உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கொழும்புக்கு கிளை நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கொழும்புக் கிளையின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கொழும்பு கிளை கலைக்கப்பட்டதாக வெளியான செய்தி மற்றும் பாடசாலையின் அதிபர் சர்ச்சை போன்ற விடயங்கள் பற்றிய தெளிவூட்டலும் கலந்துரையாடலும் நடை பெற்றது.

 

கொழும்புக்கு கிளையின் செயலாளர் கொழும்புக் கிளை கலைக்கப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் போது குறிப்பிட்ட ஓர் குறிப்பிட்ட இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக அச்செய்தியில் பெயர் குறிப்பிடப்பிடப்பட்டிருந்த எம். எஸ்.மொஹம்மட் அவர்களை தொர்புகொண்டு வினவியதுடன் அவருக்கு உத்தியோக பூர்வ கடிதம் மூலம் இது சம்பந்தமாக விளக்கமிக்குமாறு கோரியுள்ளதாக தெரிவித்தார். அக்கடித்ததுக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் பதில் அதிபருக்கு கொழும்புக்கு கிளையை கலைப்பதற்கு  எந்த அதிகாரமும் இல்லை இத்தீர்மானம் பழைய மாணவர் தாய் சங்க நிருவாக சபையினால் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டால் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும் அது வரையில் இது பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என  குறிப்பிடப்பட்டது. 

 

மேலும் கொழும்புக்கிளையின் தலைவர் அவர்களினால் அதிபர் சர்ச்சை சம்பந்தமான முழுமையான தெளிவு வழங்கப்பட்டதுடன் இது தொடர்பான விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இது உத்தியோக பூர்வ அமைப்பு என்ற வகையில் யாராவது கல்வியமைச்சினால் நியமனம் பெறும் வரையில் உத்தியோக பூர்வமற்ற முறையில் அரசியல் செல்வாக்குடன் அக்கதிரையில் இருக்கும் எந்த நபரையும் ஏற்றுக்கொள்ளவோ இணைந்து செயற்படவோ அவசியமில்லை. அத்துடன் இது ஓர் அரச தேசிய பாடசாலை என்ற வகையில் பிரதேச வாதத்துக்கு அப்பால் பாடசாலைக்கு  ஓர் தரமான நிரந்தர அதிபர் நியமனத்தை நோக்கி சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதிபா் நியமனம் பற்றி முன்னாள் அதிபா்  அபுபக்கா் லெப்பை கருத்து தெரிவிக்கையில் 

கொழும்புக் கிளையினா் கல்முனை சாஹிராக் கல்லுாாிக்கு ஜனாப் பதுருத்தீனை  நிரந்தரமான தகுதியான ஒர் அதிபாராக கல்வியமைச்சினால் நியமிக்கப் பெ  ரிதும்  பாடுபட்டது. அவா் ஏற்கனவே அதிபாரக அங்கு கடமையாற்றியவா். அவரை பலவந்தமாக அதிபா் பொறுப்பை பாரமெடுக்க முடியாமல் கல்முனை அரசியல் வாதியும்  சில அடியாட்களும் அவரை தடுத்து அச்சுறுத்தியுள்ளனா். அத்துடன் பலவந்தமாக அவருக்கு அச்சுருத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபா் மருதமுனை ஊரைச் சோ்ந்தவர் என்பதால் அவரை கல்முனை சாஹிராவுக்கு நியமிக்க முடியாமல் பிரதேச வாதத்தினை விதைக்கின்றனா்.  உள்ளுா் அரசியல் காடையா்களினால்  அவரது  வீட்டுத் தொலைபேசிக்கும்  நேரடியாகவும் அச்சுறுத்தியுள்ள்னா்.  அத்துடன் அவா் கல்வியமைச்சினால் கல்லுாாியை பொறுப்பேற்கச் சென்ற சமயத்தில் கல்லுாாியில் தற்போதைய பதில் அதிபா் பாரம் கொடுக்க முடியாது தடுத்துள்ளாா்.  மேலும் 3 மாதங்களுக்கு கல்முனை கல்விக் காரியாயலத்தில் இருக்கும்படியும் ஒரு கடிதத்தை தயாா்படுத்தி  அவரிடம் பலவந்தமாக கையொப்பம் யிட்டுத் தரும்படியும் கேட்டு ஒப்பத்தினை பெற்றுள்ளனா்.   அத்துடன்  பதுறுத்தீன் அதிபா்  கல்முனை சாஹிராவுக்குச் சென்றால் காலை உடைப்பேன் என்றும் அவரது தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியுள்ளதாகவும் முன்னாள் அதிபா் அபுபக்கர் லெப்பை அங்கு தெரிவித்தாா்.  அத்துடன் இவ் விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் படியும், ஊடகங்களுக்கு மக்ககளுக்கும் தெரியப்படுத்தவும் மற்றும்  அடிப்படை மனித உரிமை வழக்கு மனித உரிமை வழக்குகளை தொடரும்படியும் கல்வியமைச்சா்  அகிலவிராஜ்ஜூக்கும் கல்வியமைச்சின் செலயலாளருக்கும்  தெளிவுபடுத்தும்படியும் முன்னாள் அதிபா் கே.எல் அபுபக்கர் லெப்பை பழைய மாணவா்களை வேண்டிக் கொண்டாா். 

மேலும் அங்கு சமுகமளித்த  அங்கத்தவா்கள் ஆலோசனைகள் வெளியிட்டனா்.  

 

மேற்படி கலந்துரையாடலில் சபையினால் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

 

1. பழைய மாணவர் சங்க கொழும்புக்கு கிளை கலைக்கப்படவில்லை, தொடர்ச்சியாக எவ்வித தடையுமின்றி செயற்படும்.

 

2. இவ்விடயம் சம்பந்தமாக தாய் சங்க தீர்மானத்துடன் எழுத்து மூல அறிவித்தல் கிடைக்கப்பெற்றால், அது தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

3. உத்தியோக  பூர்வ அதிபர் நியமிக்கப்படும் வரை சட்ட விரோதமாக அதிபராக இருக்கும் எவரையும் ஆதரிக்க தேவை இல்லை.

 

4. பாடசாலைக்கு தரமான நிரந்தர  அதிபர் ஒருவரை நியமிக்கும் செயற்திட்டத்தில் கவனம் செலுத்துதல்.

 

 

மேலும் பிரதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தனது நெருக்கமான ஊடகவியலாளர் ஊடாக  இந்நிகழ்வில் பகிரங்கமாக அறிவிக்கும்படி ஓர் செய்தியினை அனுப்பி இருந்தார். அதாவது பாடசாலையின் அதிபராக எம்.எஸ். மொஹம்மட் அவர்களை நியமிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இதேவேளை, இந்நிகழ்வுக்கு முன்னர் எம்.எஸ். மொஹம்மட் அவர்கள் கொழும்பு கிளையின் தலைவர் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு ஓர் செய்தினை அறிவிக்கும்படி கேட்டிருந்தார். தனக்கு இன்னும் சில நாட்களில் கல்வி அமைச்சிலிருந்து நியமனக் கடிதம் நிச்சயமாக கிடைத்திவிடும் அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற இருக்கும்  நேர்முகப் பரீட்சையில் தனது அதிபர் தரம்  SLP II இலிருந்து SLP I ஆக மாற்றம் பெற்றுவிடும் என தான் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

 

இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரண்படுவதாக தெரிகிறது, அரசியல் அதிகாரத்துக்கு மத்தியில் எல்லா விதமான நேர்மையான நடவடிக்கைகளும் மழுங்கடிப்பட்டுவிடும் என்பதே கண் கூடு கண்ட யதார்த்தமாகும்.

Related posts

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

wpengine

புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி

wpengine

இம்ரான் பாகிஸ்தானின் “அவமானத்தின் நாள்” இலங்கையர் பகிஸ்தானில் கொலை

wpengine