செய்திகள்பிரதான செய்திகள்

கல்பிட்டியில் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது..!!!

கல்பிட்டியில் மூன்று டிங்கி படகுகள் மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதோடு, இதன் மொத்த பெறுமதி 1.3 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முகத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுந்தல், சின்ன குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்களத்தின் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

புரையோடிப் போயில்ல மத சார்பான மக்களை மூளைச் சலவை செய்வது மிகக் கடினமே NDPHR

wpengine

வவுனியாவில் பிடியளவு கமநிலத்திற்கு செயற்றிட்டம் இன்று ஆரம்பம்..!

Maash

அமெரிக்காவின் வரிவிதிப்பின் தீர்வுக்கு ரணிலின் அறிவுரை . .!

Maash