பிரதான செய்திகள்

கல்குடா எதனோல் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கோரி கல்குடா உலமா சபையினால் ஏற்பாடு செய்த கவனஈர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இதன்போது ஓட்டமாவடி மீராவோடை, காவத்தமுனை, செம்மன்னோடை, மாவடிச்சேனை, தியாவட்டவான் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கலாசார, குடும்பச் சீரழிவுகளை உருவாக்கி சமுதாயத்தைக் கெடுக்கும் எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை உடன் நிறுத்தக் கோருவோம், மதுவை எதிர்த்து சமுதாய நலன் காப்போம், வேண்டாம் வேண்டாம் சமூக சீர்கேடு வேண்டாம், சாராய ஆலை வேண்டாம் கல்லூரிகளை உண்டாக்கு, மதுபான ஆலைக்கு பதிலாக பல்கலைக்கழகம் தாருங்கள், போதையற்ற இலங்கை எங்கே என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாளேந்திரன், தமிழ், முஸ்லிம் சமூக ஆர்வாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர்கள் பேரணியில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளிடம் கல்குடா உலமா சபையினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் கல்குடா கிளை ஏற்பாடு செய்த எதனோல் தொழிற்சாலைக்கு எதிரான பேரணியும் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றது.

Related posts

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

wpengine

பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை!-அமைச்சர் டக்ளஸ்-

Editor

‘முஸ்லிம்களை மடையர்கள் என நினைத்து விட்டார்கள்’ – அமீர் அலி!

Editor